Wednesday, February 24, 2010

பிரியமான தோழி......

நீ பூவாக இருப்பதை விட,
நிலவாகவே இரு !
நீ கனவாக இருப்பதை விட,
காவியமாகவே இரு !
நீ அலையாக இருப்பதை விட,
கடலாகவே இரு !
வானம் தந்த மழையா நீ ?
உன்னால் பூவெல்லாம் பூக்கின்றது !
வார்த்தை தந்த தேவதையா நீ ?
உன்னால் கவிதை வருகின்றது !
அதிசயம் உன்னால் சிற்பம் பேசுகின்றது !
உண்மைதான் உன்னால் ஓவியம் மிதக்கின்றது !
பேசும் கிளிகளுக்கு நடுவில்,
பாடும் பூ நீ !
ஆடும் மயில்களுக்கு நடுவில்,
அமைதி மொட்டு நீ !
உன்னை வாழ்த்திட வேறு மொழி இன்றி, என் தமிழே அழகு !
என் கவிதைகள் கற்ப்பனை அல்ல,
உன்னை கண் முன்னே நிறுத்தியே ஏழுதுகின்றேன் !
ஆயிரம் பெண்களுக்கு நடுவில், நீ ஒரு அற்ப்புத படைப்பு - உன்
அன்பால் நினைவில் வந்த வார்த்தை !
எங்கோ ! பிறந்த நான்,
உன்னைப்போன்ற நட்பை பெறுவது - என்றோ !
நான் செய்த புன்னியம் !
தீயில் முளைத்த தீபம் நீ !
பூவால் வந்த தென்றலும் நீ !
தங்கம் கூட உன்னை கண்டால்,
தள்ளிப்போகும் !
வைரம் கூட உன்னை கண்டால்,
உச்சிக்கொட்டும் !
மரகதமும் உனது காலடியில்.,
மலர்கள் தோட்டம் உன் பொற்பாதம் !
உனக்கு வாழ்த்து சொல்ல,
நான் மட்டுமே - நட்பு என்ற வரம் பெற்றேன்...!
***************************************************************
நட்புடன்...

Friday, February 12, 2010

நட்பு

நம் நட்பின் ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்

எத்த‌னை பேச்சுக்கள்
எத்த‌னை ச‌ண்டைக‌ள்
எத்த‌னை கோப‌ங்க‌ள்

என் துய‌ர‌ங்க‌ள்
அனைத்தையும்
க‌ன‌வுக‌ள் சும‌ந்து வ‌ரும்
உன் க‌ண்க‌ள்
மற‌க்க‌டித்து விடும்

இந்தக் க‌ல்லூரி
ம‌திற் சுவ‌ருக்குள்
ப‌ய‌ங்க‌ளோடு வ‌ந்த‌
என‌க்கு ந‌ம்பிக்கையின்
சிற‌குக‌ளைத் தந்த‌வ‌ள் நீ
ந‌ட்பின் க‌த‌வுக‌ளை
திற‌ந்து விட்ட‌வ‌ள் நீ

ம்ம்ம்
வார்த்தைக‌ளின்
வ‌ர்ண‌ஜால‌ங்க‌ள் மூல‌மாய்
ந‌ம் ந‌ட்பை
சொல்லி விட‌த்தான்
நினைக்கிறேன்
வார்த்தைக‌ள் தீர்ந்து
வ‌லி ம‌ட்டுமே
மிஞ்சுகிற‌து....

ஆண்-பெண் நட்பு இலக்கணம்


இருபதாம் நூற்றாண்டின் ஆண்-பெண் நட்பு இலக்கணம் படைப்போம் வாரீர்..

இளமையின் திரை கட்டப்படாமலும்
கலாச்சாரத்தின் திரை வெட்டப்படாமலும் இருத்தல் வேண்டும்

இதழ்களில் பூக்கும் புன்கையை பரிமாறிக்கொண்டும்
இளமையில் துளிர்க்கின்ற முத்தங்களை சிறை வைத்துக்கொண்டும்
இருத்தல் வேண்டும்

விரல்கள் தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்த போதும்
விழிகள் தொட்டு விளையாட வேண்டுமேயொழிய
கரங்கள் தொட்டு அல்ல

ஆண்கற்பு பிம்பம் பெண்கற்பு கண்ணாடி
கலாச்சார கவனம் சிதறினால்
உடைவது கண்ணாடி மட்டுமே பிம்பங்கள் அல்ல
ஒரு முறை சிந்திப்போமா?

... சிந்தனை இன்னும் கொஞ்சம் மலரும்

நண்பர்களை பிரிக்காதே..........


ஏனடா இறைவா,

கைவிரல்களை
ஓடித்தாய்,
உடலில் பாய்ந்த
உதிரம் குடித்தாய்,
நட்பின்
பவித்திரம் சிதைத்தாய்,
மலரை
தீயிட்டு வதைத்தாய்,
செடிமேல்
அடைமழை பெய்தாய்,

அவள் மனம்
சுமந்த
கனவுகள் கோடி,
முடித்தாயே நீ
முகாரி பாடி,

உலகத்தில்
அவளோர் புள்ளி
ஏன் வைத்தாய்
அவளுக்கு கொள்ளி,

பிரித்தாயே என்
இரண்டாம் தாயை,
இனி என்
தோள்சாய நட்பேது,
விழிநீர்
துடைக்க விரலேது,

உயிர் தோழியே,
நட்பின்
கலியுக இலக்கணமே
இறக்க துடிக்கிறேன்
நானும் இக்கணமே,

காதலனை பிரிந்தாலும்
சுகித்திருப்பேன்,
தோழியை பிரித்தாய்
எப்படி சகித்திருப்பேன்,

என் துயர்
துடைப்பார் யாரடா,
இனி என்
வாழ்வே வீனடா,

மண்டியிடுகிறேன் இறைவா
நண்பர்களை பிரிக்காதே..............

எதிர்காலம்

எதிர்காலம் என்பது நீ எட்டி பிடிக்கும்
தூரத்தில் தான் உள்ளது......


தாவி பிடித்துகொல்வதும்
தொட முடியாத தூரத்திற்கு அனுப்புவதும்
உன் கையில்........

சோர்ந்திருந்தால் சிலந்தியும்
உன்னை சிறை பிடிக்கும்......

எழுந்து நடந்தால் இமயமும்
உனக்கு வழி கொடுக்கும்.....

சுடரென புறப்பட்டால் சுனாமியும்
உன்னை சூழ மறுக்கும்...

நேசித்த பொருள் கிடைப்பதை விட
கிடைத்த பொருளை நேசிப்பது BETTER

Because

நீ நேசித்த பொருள் உனக்கு Special But
கிடைத்த பொருளுக்கு நீ Special......


நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை.....
ஏன் என்றால்
நிஜம் என்பது சில நிமிடம்தான்...
நினைவுகள் என்றும் நிரந்தரம்

படித்ததில் ரசித்தவை

"நிழலாய் குடையாய்
உடன்வரும்
எனக்கும் வயது பத்தொன்பது...
என்றேனும் ஒரு நாள்
உணர்ந்ததுண்டோ தோழி"-------
ஙப்போல் வளை கவிதைத் தொகுப்பிலிருந்து- கவிஞர்.இரா.காமராசு.

படித்ததில் ரசித்தவை

மண்ணோடு மரத்தை
வெட்டிச் சாய்த்தபின்
மண்ணுள் வேர்களின்
கண்ணீரை
யார் அறிவார்?

விண்ணோடு நீந்திவரும்
வண்ணமகள் வெண்ணிலவு
சொல்லாமல் தொலைகையில்
சோர்ந்துருகும் இரவுகளின்
சோகத்தை யார் அறிவார்?

கண்ணோடு மனம் வருடி
சிறுமலரில் ஒரு மலராய்
மெய்யுருகும் வேளைகளில்
பிஞ்சுக் கரங்களுள்
சிறைப்பட்டுச் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சியின்
படபடப்பை யார் அறிவார்?

பெண்ணோடு காமம்கொண்டு
பொன்மேனி புண்ணாக்கும்
காமுகனின் கரங்களுள்
கருகிப் போகும்
பூவையரின்
மனச்சிதறல் யார் அறிவார்?

தன்னோடு வெறுப்பெய்தி
தான் வாழப்பிடிக்காமல்
தற்கொலை புரிந்தபின்னும்
ஊர் வாயில் அகப்பட்டு
ஊகங்களுள் சிறைப்பட்டு
வெறும் காற்றாகிப்
படபடக்கும் - அந்த
உயிரின் வலி யார் அறிவார்?

புரிந்துக் கொள்ளா இதயங்களுடன்…

இதோ புதுப் பிறவி எடுத்துள்ளேன்
பழையப் பிறவியின் ஞாபகங்களுடன்
இதோ இன்று தான் பிறந்துள்ளேன்
உலகின் அத்துனை அனுபவங்களுடன்
இதோ மூடிய விழி திறந்துள்ளேன்
மூடா விழி கொடுத்த நிகழ்வுகளுடன்
இதோ புதிய இதயம் பெற்றுள்ளேன்
கொழுப்பொத்த கொடிய நினைவுகளுடன்
இதோ புணரமைப்பு செய்துள்ளேன்
எந்த வித மாற்றமும் இல்லாமல்
இதோ வாழ்க்கையைப் புரிந்துள்ளேன்
என்னை புரிந்துக் கொள்ளா இதயங்களுடன்…

தோழியடி நீ எனக்கு..

தோழியடி நீ எனக்கு..


ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி -
தோழியடி நீ எனக்கு..

-- கவிஞர் அறிவுமதி

நட்பு

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.. !


--

கவிஞர் அறிவுமதி

நட்பு வேண்டும்

மழலைப் பருவத்தில்பார்த்து வியக்கஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்ஓடி விளையாடஒரு நட்பு...

காளைப் பருவத்தில்ஊர் சுற்றஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்பேசி ரசிக்கஒரு நட்பு...

முதிர்ந்த பின்அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போதுதோள்களில் சாயநட்பு வேண்டும்...

துன்பத்தின் போதுகண்ணீர் துடைக்கநட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போதுமனம் மகிழநட்பு வேண்டும்...

நானாக நானிருக்கநட்பே...

நீ எனக்குநட்பாக வேண்டும்...

நட்பூ


இன்றும் கூட
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நீ என்றாவது
ஒரு நாள் வருவாய்
உன்னால் முறிந்து
போன நட்பில்
மீண்டும் பூ பூக்குமென்று...

-----

அன்று
உனக்கும் எனக்கும்
ஏதோ சின்ன மனவருத்தம்
நெடுநேரம் நிலவிய‌
இறுக்கமும் மௌனமும்
உடைந்தது
எதற்காகவோ
நாம் கைகோர்த்துக் கொண்ட‌
அந்த நொடிப் பொழுதில்....

தோழிஇலக்கியம், இதழியல்,
புரட்சி, சமூகம்,
அரசியல், காதல்,
நட்பு, பாசம்,
வறுமை, சினிமா,
பட்டினி சாவுகள்,
இசை, கடிதங்கள்,
உன் காதலன், என் காதலி,
என்று என்னதான்
பேசவில்லை நாம்
ஒரு தோழி இருப்பது
எத்தனை செளகர்யம்....
 
படித்ததில் இரசித்தது - Free Blogger Templates, Free Wordpress Themes - by Templates para novo blogger HD TV Watch Shows Online. Unblock through myspace proxy unblock, Songs by Christian Guitar Chords